போதை அடிமைத்தனத்திற்கு தீர்வு என்ன? Best book of Sadam husain hasani -1

Writer.Sadam husain hasani


புத்தக சுறுக்கம்:

இந்த புத்தகத்தில் இன்றைக்கு உலகையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கக்கூடிய,மேலும் பெரும்பான்மையான மக்களின் வாழ்வை உறிஞ்சிக் கொண்டிருக்கக்கூடிய போதைப்பொருட்கள் ஏன் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது என்பது சம்மந்தமாகவும்,அதனை எத்தகைய நோக்கத்தில் ஊக்குவிக்கப்படுகின்றது என்பது சம்மந்தமாகவும்,அதனை பயன்படுத்துபவர்கள் எவ்வாறெல்லாம் ஊக்குவிக்கப்படுகின்றனர் என்பது சம்மந்தமாகவும்,மேலும் இந்த கொடூரமான போதை அடிமைத்தனத்திற்கு தீர்வுதான் என்ன என்பது சம்மந்தமாகவும் மிக எளிய வடிவில் விரிவாக விவரித்திருக்கின்றேன்.

கொடிய போதை அடிமைத்தனத்திலிருந்து வெளிவரத் துடிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய இந்த சிறிய புத்தகம் நிச்சயம் மிக பிரயோஜனமிக்கதாக அமையும் என்றே ஆதரவு வைக்கின்றேன்.எனவே அன்பு நண்பர்கள் இதனை வாசிப்பதோடு மட்டுமல்லாமல் உங்களால் முடிந்தளவு போதைக்கு அடிமையாவதின் தீங்குகளை உணர்ந்து அதனைவிட்டும் வெகுதூரம் விலகிச்செல்லும்படி கனிவன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.

இந்த கட்டுரையில் எனது புத்தகத்தின் ஆரம்ப பகுதியை மட்டும் உங்கள் பார்வைக்கு தரவேண்டும் என்று விரும்பியதால் அவற்றை மட்டும் இங்கு நான் பதிவு செய்திருக்கின்றேன்.இதனை வாசித்து பயன்பெறுவதோடு எனது முழு புத்தகத்தையும் அமெசானில் பெற்று பயன்பெறும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இன்றைக்கு போதை பொருள் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலோர் அதில் தங்களுக்கான சில பயன் இருக்கின்றது என்பதை கருத்தில் கொண்டே பயன்படுத்துவதாக கூறுவதை நாமெல்லாம் அறிவோம்.எனவே முதலில் அது என்ன பலன் என்பது சம்மந்தமாகவும் அந்த பயனிற்காக எல்லா மனிதர்களும் போதை பொருளை வரம்பற்று பயன்படுத்துவது சரியாகுமா என்பது சம்மந்தமாகவும் அறிந்து கொள்வது இங்கு மிகச் சிறப்பாக இருக்கும் என்றே கருதுகின்றேன்.ஆகவே வாருங்கள் முதலில் அது என்ன பயன் என்பது சம்மந்தமாக பார்ப்போம்.

போதை பொருளில் பயன் உள்ளதா?அது என்ன பயன்?

அறிவியல் ரீதியில் போதை பொருட்களில் மனிதனுக்கு சில பயன் இருப்பதாக சொல்லப்படுவது உண்மையேயாகும். அதாவது சுய நினைவை இழப்பது என்ற ஒரு நிலை போதை பொருட்களை பயன்படுத்துவதால் மனிதனுக்கு கிடைக்கப்பெறும் ஒரு பயன் என்பதாகவே அறிவியல் ஆய்வின் முடிவுகள் விவரிக்கின்றன.இதனை கருத்தில் கொண்டுதான் பலரும் மது போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவதை சரி காணவும் முற்படுகின்றனர்.

அதாவது இந்த உலகில் தீர்க்க முடியாத துக்கங்களையும் துயரங்களையும் கடப்பதற்கு இந்த போதை பொருட்களை பயன்படுத்தி சுயத்தை மறந்து அவற்றை எளிமையாக கடந்துவிடலாம் என்று தங்களின் போதை பழக்கத்திற்கு அடிப்படை காரணமாக கூறுகின்றனர்.மேலும் இதுதான் போதைப்பொருட்களில் உள்ள மிக முக்கியப் பயன் என்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.

ஆனால் இக்கருத்து ஏற்கத்தகுந்தவைதானா என்று சற்று ஆராய்ந்து பார்ப்போமானால் என்னைப்பொறுத்தமட்டில் இதனை பயன் என்று சொல்வதை விட மிக ஆபத்தான பயன் என்று சொல்லவே நான் விரும்புகின்றேன். ஏனெனில் துக்கங்களையும் துயரங்களையும் கடப்பதற்கு இந்த உலகில் ஆயிரம் வழிகள் இருந்தும் துக்கத்தை மறப்பதற்காக மதுவை குடிக்கின்றேன் என்று கூறி தன்னையே மறந்துவிடும் நிலையை தேர்ந்தெடுக்கும் மனிதன் பல்வேறு ஆபத்துக்குள் தள்ளப்படுகிறான் என்பதை மறந்துவிடுவது மிக கைசேதமான நிலை என்றே நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

மேலும் மருத்துவத்திற்காக மருத்துவர்கள் ஒரு மனிதனின் நிலையை அறிந்து இத்தகைய போதையான நிலையை தேர்ந்தெடுப்பதற்கு வலியுறுத்தி இருப்பதையே போதைப் பொருள் பிரயோகிக்கப்பட்டதற்கான முந்திய வரலாறாகவும் நம்மால் காண முடிகின்றது.ஆனால் மருத்துவத்திற்காக கூறப்பட்ட அந்த நிலையை ஒருவன் தன் நிரந்தர நிலையாக ஆக்கிக்கொள்ள எடுத்துக்காட்டாக எண்ணுவது என்பது தன்னை தானே அழிவில் போட்டுக்கொள்வதற்கும் உதவுமே தவிர வேறு எதற்கும் உதவாது என்பதே எனது தீர்க்கமான பார்வையாகவும் இருக்கின்றது.

எனவே போதைப்பொருட்களை உபயோகப்படுத்துவது என்பது ஏதோ சில மனிதருக்கு மருத்துவமாக அமைகிறது என்றாலும் இன்றைக்கு ஒவ்வொருவரின் வாழ்வையும் முற்றாக அழித்துவிடும் அளவிற்கு அது அங்கம் வகிப்பது என்பது இந்த மனித சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அவ்வாறே இன்றைக்கு உலகில் நடக்கும் பெரும்பான்மையான குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் இந்த போதையின் காரணத்தால்தான் அதிகம் அரங்கேற்றப்படுகின்றது என்றே புள்ளிவிவரங்களும் நமக்கு விவரிக்கின்றது.மேலும் அப்புள்ளி விவரங்களே இந்த மனித சமூகத்தில் போதை பொருளால் வெளிப்படும் சமூக சீர்கேட்டை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.மேலும் உலகில் அதிகப்படியான விபத்துக்கள் இந்த போதை பொருட்களை உட்கொள்பவர்களால் மட்டுமே நிகழ்த்தப்படுவதாகவும் பல்வேறு அறிக்கைகள் நமக்கு எடுத்தியம்புகின்றது.

ஆகவே துக்கத்தையோ அல்லது துன்பத்தையோ மறப்பதற்காக போதை பொருட்களை பயன்படுத்தலாம் என்று நினைப்பதே அறியாமையின் வெளிப்பாடு என்றே நான் கருதுகின்றேன்.ஏனெனில் துக்கங்களையும் துயரங்களையும் மறப்பதற்கு போதை பொருட்களை பயன்படுத்துவது என்பது குளத்தில் மூழ்கி கொண்டிருந்த ஒருவர் அங்கிருது எழுந்து வந்து கடலில் மூழ்குவதைப்போன்றதே என்றே நான் கருதுகின்றேன். இத்தகைய செயலை ஒருவன் தனக்கு பயன்தரும் என்று தேர்ந்தெடுக்கின்றானெனில் அவனைவிட முட்டால் இவ்வுலகில் வேறு யாரும் இருக்க முடியாது என்பதில் நம்மில் எவருக்கும் மாற்றுக் கருத்திருக்காது என்றே நம்புகின்றேன்.

போதை பொருட்கள் ஊக்குவிக்கப்படுவதின் நோக்கம் என்ன?

போதைப்பொருட்கள் பெரும்பாலும் இரண்டு நோக்கங்களுக்காக ஊக்குவிக்கப்படுவதாகவே நம்மால் அறிய முடிகின்றது.

1.சமூக சீர்கேட்டை மட்டுமே நோக்கமாக கொண்டு ஊக்குவித்தல்.

2.வியாபாரத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு ஊக்குவித்தல்.


மேலும் வாசிக்க அமெசான் கிண்டிலில்  உள்ள "போதை அடிமைத்தனத்திற்கு தீர்வு என்ன?" என்ற புத்தகத்தை பெற்று வாசித்து பயன்பெறும்படி அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.கருத்துரையிடுக

புதியது பழையவை