பெண் அடிமைத்தனமும் அதில் சமூகத்தின் பெரும் பங்கும்-Best book of Sadam husain hasani-2

Written By: A. Sadam husain hasani


புத்தக சுறுக்கம்:

உலக நாடுகளெல்லாம் வின்வெளி ஆராய்ச்சியில் விண்ணைத் தொட்டுக்கொண்டிருக்கும் நிலையில் தன் வாழ்க்கையை எல்லா காலமும் அடிமைத்தனத்திலும் அற்ப சேவகத்திலுமே கழிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்ட பெண் இனத்தைப்பற்றி பேச இங்கு யாரும் தயாராக இல்லை என்பதே இந்த மனித சமூகத்திற்கு ஏற்பட்ட முதல் சாபமாக நான் காண்கின்றேன்.

இந்த மனித இனம் நாகரீகத்தின் உச்சியை தொட்டுவிட்டதாக கூறப்படும் இதே 20 ஆம் நூற்றாண்டிலும் பண்டைய காலத்தில் பெண் எவ்வாறெல்லாம் உடல் ரீதியிலும், மன ரீதியிலும், பொருளாதார ரீதியிலும், பொது வாழ்வியல் ரீதியிலும் இந்த சமூகத்தால் அடக்கி ஒடுக்கப்பட்டு அடிமையாக்கப்பட்டாலோ அதே நிலையில்தான் இன்று வரை இருக்கின்றாள் என்பதாகவே நான் காண்கின்றேன்.
அவளை மீண்டும் மீட்டெடுக்கவே முடியாதோ என்று நிலை குழைந்து நிற்கும் அளவிற்கு அவள் இந்த சமூகத்தால் அதலபாதாலத்தில் தள்ளப்பட்டிருப்பதை என்னால் முழுமையாக உணர முடிகிறது.

என்னுடைய இந்த சிறிய புத்தகத்தில் ஒரு பெண் எப்படியெல்லாம் இந்த சமூகத்தால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றாள் என்பதை என்னால் முடிந்தளவு சுறுக்கமாகவும், எளிமையாகவும் விளக்க முயன்றிருக்கின்றேன்.இதனை வாசிக்கும் உங்களில் ஒவ்வொருவரும் இந்த சமூகத்தின் கட்டமைப்பை மாற்றியமைக்கும் வல்லமைபடைத்தவர்கள் என்ற உயர்ந்த எண்ணத்திலேயே இந்த புத்தகத்தை நான் உங்களுக்கு அற்பணிக்கின்றேன். எனவே இதை வாசிப்பதின் மூலம் நீங்களும் ஒரு இனத்திற்கெதிரான இந்த சமூகத்தின் மிகக் கொடிய அநீதியிலிருந்து தப்பித்துக் கொண்டு உங்களை சார்ந்தவர்களையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்று பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.

அவ்வாறே உலக அளவில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் மிக மோசமான அநீதிகளை இந்த புத்தகத்தில் பல்வேறு நிகழ் உதாரணங்களுடன் விளக்கியிருக்கின்றேன்.நிச்சயமாக அந்த அநீதிகளுக்கு பெரும் அளவில் இந்த சமூகத்தின் கொடூரமான கட்டமைப்பே காரணம் என்பதையும் விரிவாக விவரித்திருக்கின்றேன்.எனவே என்னுடைய இந்த புத்தகத்தை வாசிப்பது நிச்சயம் ஒரு சிறந்த கண்ணோட்டத்தை தரும் என்றே ஆதரவு வைக்கின்றேன். அதன் அடிப்படையில் அப்புத்தகத்தின் முன்னோட்டமாக இந்த கட்டுரையில் "பொருளாதாரமும் பெண் அடிமைத்தனமும்"என்ற ஒரே ஒரு தலைப்பை மட்டும் உங்கள் பார்வைகளுக்கு தருகின்றேன். நிச்சயம் இந்த கட்டுரையும் என்னுடைய அந்த புத்தகத்தை ஆழமாக புரிந்துகொள்ள மிக உறுதுணையாக இருக்கும் என்றே கருதுகின்றேன்.

பொருளாதாரமும் பெண் அடிமைத்தனமும்:

இந்த உலகத்தில் ஒரு மனிதனுக்கு எப்படி கல்வியும், சுதந்திரமாக செயல்படும் உரிமையும் மிக அவசியமோ அதனைப்போன்றே ஒரு மனிதனுக்கு தன் வாழ்வை நிம்மதியாக கழிக்க பொருளாதாரமும் மிக அவசியமாக இருக்கின்றது என்பதை நாமெல்லாம் நன்றாக அறிந்து வைத்திருப்போம்.(பொருளாதாரம் சார்ந்த பல்வேறு விவரங்களை மேலதிகமாக பெற்றுக்கொள்ள எனது "முழுமை பெற்ற மனிதனாக இரு" என்ற புத்தகத்தை வாசியுங்கள்.)

இங்கு பெண்களின் பொருளாதாரம் குறித்து நாம் பேசுவதற்கு முன்பு இந்த மொத்த மனித சமூகமும் பொருளாதாரம் குறித்து எத்தகைய அடிமைத்தனத்தில் ஆழத்தப்பட்டிருக்கின்றது என்பது சம்மந்தமாகவும் சில விளக்கங்களை காண்பது மிக பிரயோஜனமிக்கதாக இருக்கும் என்றே கருதுகின்றேன்.அதாவது பொருளாதாரம் சார்ந்து பெண்கள் மிகப்பெரும் அநீதிக்கு உட்படுத்தப்பட்டு அடிமைபடுத்தப்பட்டிருக்கின்றனர் என்பது ஒருபுறம் இருக்க இந்த மனித சமூகத்தின் 97 % (சதவிகித) ஆண்களும் கூட பொருளாதாரத்தின் விஷயத்தில் அடிமைபடுத்தப்பட்டிருப்பதாகவே வரலாற்றின் மூலமும் சமூக அமைப்பின் மூலமும் என்னால் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

அந்த அடிமைத்தனமானது மதத்தின் பெயராலும் இனத்தின் பெயராலும் அடக்குமுறையின் பெயராலும் இன்றைய இருபதாம் நூற்றாண்டிலும் பல்வேறு பரிணாமங்கள் அடைந்து படர்ந்து விரிந்து கொண்டே சென்று கொண்டும் இருக்கின்றது என்பதையே இங்கு முதற்கட்டமாக பதிவு செய்ய விரும்புகின்றேன்.

ஆம்.!

இன்றைக்கும் இந்த உலகின் பெரும்பாலான செல்வங்கள் குறிப்பிட்ட சில சொற்ப நபர்களால் மட்டுமே அனுபவிக்கப்பட்டு அவற்றின் பெரும் பகுதியை விட்டும் பெரும்பான்மையான மக்கள் தூரமாக்கப்பட்டு வருகின்றனர் என்பதையே நான் இவ்வாறு கூறுகின்றேன்.இன்று அரசு என்ற பெயரிலும் அதிகாரம் என்ற பெயரிலும் இந்த உலகின் பெரும்பாண்மையான மக்கள் அடிமைபடுத்தப்பட்டிருக்கவே செய்கின்றனர் என்ற கசப்பான உண்மையை ஒரு எழுத்தாளனாக முதற்கண் இங்கு உங்கள் கவனத்திற்கு தருகின்றேன்.

இவ்வாறு பொருளாதாரத்தின் விஷயத்தில் ஆண்களுக்கே பல்வேறு சவாலான கொடுமைகளை இழைத்து வரும் அற்ப ஆதிக்க சமூகம் கேட்பாறற்ற பெண் இனத்திற்கு பொருளாதாரத்தில் இழைத்து வரும் கொடுமைகளை சொற்களில் அடக்கிவிடவே முடியாது என்றே கருதுகின்றேன்.அத்துனை ரனங்களும்,ரத்தங்களும் இந்த பெண் இனத்தை சூழ்ந்திருப்பதாகவே என்னால் காண முடிகிறது.

அந்தளவிற்கு அன்றிலிருந்து இன்று வரை ஒரு பெண் குறைவான வெகுமதி பெறுகின்றாள் அல்லது பணி இடத்தில் ஆயிரமாயிரம் சவால்களை சந்திக்கின்றாள் என்பதெல்லாம் ஒருபுறமிருக்க மற்றொரு புறம் ஒரு பெண் பொருளாதாரம் சார்ந்து எந்த பலமும் பெறக்கூடாது என்ற அடிப்படைவாதம் இன்றும் நம் ஒவ்வொருவரின் மனங்களிலும் துறுவாய் படிந்துபோய்தான் கிடக்கின்றது என்று நான் குற்றம் சாட்டுவதை உங்களில் யாராவது மறுக்க முடியுமா?

தன் வீட்டில் உள்ள பெண்ணேயாகட்டும் அவளும் பொருளாதாரம் சார்ந்து சிந்திக்கக் கூடாது என்றும், அல்லது அதைப்பற்றி பேசவே கூடாது என்றும் அல்லது அதைப்பற்றி எக்கேள்வியும் கேட்டிடவேகூடாது என்றும் ஆயிரமாயிரம் கட்டளைகளையும் உத்தரவுகளையும் பிறப்பிக்கும் ஆணதிக்க மனோபாவம் கொண்ட மடயர்கள் இன்றைக்கும் நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் ஒய்யாரமாக வீற்றிருக்கத்தான் செய்கின்றார்கள் என்று நான் குற்றம் சாட்டுவதை உங்களில் யாராவது மறுக்க முடியுமா?

ஆசைப்பட்டது வேண்டுமென்றால் அப்பா தருவார் அல்லது சகோதரன் தருவன் அல்லது அவர் தருவார் இவர் தருவர் என்று ஒரு பெண்ணிடம் போதிக்கும் இதே சமூகம் அவளிடம் "உன்னாலும் சுயமாக உழைத்து சுதந்திரமாக அனைத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்" என்று பெரும்பாலும் போதிக்கத்தவறிவிடுகின்றது என்று நான் குற்றம் சாட்டுவதை உங்களில் யாராவது மறுக்க முடியுமா?

அவ்வளவு ஏன் அவள் உழைத்த பணத்தைக் கூட யாரோ ஒருவரிடம் அனுமதி பெற்றுவிட்டுத்தான் செலவு செய்ய வேண்டும் என்ற அவலநிலையை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமா? இன்று பெண்களுக்கும் சொத்தில் பங்குண்டு என்று பெருமை பேசத்தயாராக இருக்கும் இதே ஆதிக்க ஆணவ சமூகம் அதனை அடைவதற்காக இந்த இருபதாம் நூற்றாண்டிலும் அந்தப்பெண் இந்த உலகின் பெரும் பகுதியை இழந்துகொண்டிருக்கின்றாள் என்று நான் குற்றம் சாட்டுவதை இல்லை என்று மறுக்க முடியுமா?

தனது வீட்டில் உள்ள பெண்களுக்கே உணவு கொடுத்தேன்,உறவிடம் கொடுத்தேன்,அல்லது திருமணம் செய்து கொடுத்தேன் எனவே சொத்தில் பங்கெல்லாம் கெட்காதே என்று பழைய பஞ்சாங்கம் பேசி அவளை எக்காலமும் கையேந்தச் செய்யும் அதிமேதாவிகள் இன்றைக்கும் நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் கம்பீரமாய் நடமாடிக்கொண்டுதான் இருக்கின்றனர் என்று நான் குற்றம் சாட்டுவதை உங்களில் யாராவது மறுக்க முடியுமா?
நிச்சயமாக ஒரு மனசாட்சியுள்ள மனிதரால் மறுக்க முடியாது என்றே நம்புகின்றேன்.

இப்படி ஒவ்வொரு நாளும் ஒரு பெண் சந்திக்கும் ஆயிரமாயிரம் குரூரங்களைத்தான் இந்த இழி சமூகத்தின் அற்ப ஆதிக்க மனோபாவம் என்று நான் குற்றம் சாட்டுகின்றேன்.இன்னும் இத்தகைய ஆதிக்க மனோபாவம் கொண்ட அரக்கர்கள்தான் இந்த 20 ஆம் நூற்றாண்டிலும் பெண்களை பொருளாதாரம் சார்ந்து அடக்கி வைத்து அடிமைப்படுத்தத் துடித்துகொண்டிருக்கின்றனர் என்றும் வாதிடுகின்றேன்.உண்மையில் இன்று வரைக்கும் பெண்களை பொருளாதாரத்தை விட்டும் தூரமாக்கியதில் இந்த ஆதிக்க மனோபாவம் கொண்ட அற்ப சமூகத்திற்கே பெரும் பங்கு இருக்கின்றது என்ற எனது குற்றச்சாட்டையும் இதன் அடிப்படையிலேயே நான் முன்மொழியவும் செய்கின்றேன்.

நான் ஆரம்பித்தில் சொன்னதுபோன்று இந்த சமூகம் பெண்களை வெளியில் செல்வதையே தவறாக சித்தரிப்பது ஒருபுறமிருக்க வேலைக்காக ஒரு பெண் வெளியேறும் பொழுது அவளுடைய வாழ்வே இந்த சமூகத்தால் நரகமாக்கப்படுவதாக கூறி கதறி அழுத காட்சிகளையும் என் கண்களாலேயே கண்டிருக்கின்றேன்.ஏனெனில் வேலை பழு ஒருபுறம் வதைக்கின்றது.அது அல்லாமல் முதலாலிகளின் அதிகார ஆதிக்கம் மற்றொரு புறம் நசுக்குகின்றது.அதனையும் தாண்டி ஊதியமாவது போதுமானதாக கிடைத்துவிடுமா என்றால் அதிலும் அவளுக்கு ஏமாற்றமே காத்திருக்கின்றது.சரி இவற்றையெல்லாம் விட்டு வீட்டுக்கு வந்துவிட்டால் கடமை தவறிவிடக்கூடாத குடும்ப பொறுப்பு ஒரு புறம் அவள் கழுத்தை நெறித்துக் கொண்டிருக்கின்றது.

உண்மையில் இத்தகைய நிலையில்தான் ஒரு பெண் நரக வேதணையை அனுபவிக்கின்றாள் என்று நான் கருதுகின்றேன்.இப்பொழுது நீங்களே கூறுங்கள் இத்தகைய அடக்குமுறைக்கு ஒரு பெண் ஆளாக்கப்படுவதற்கு இந்த சமூகத்தின் அநீதி நிறைந்த கட்டமைப்பே என்று நான் குற்றம் சாட்டுவதில் என்ன தவறிருக்கின்றது?

மேலும் இந்த உலகின் அடக்குமுறைகளை விட்டும் ஒரு பெண் விலக முடியாத அளவிற்கு உறுதிமிக்க ஒரு மாய வலையை இந்த சமூகம் தோற்றுவித்து வைத்திருக்கின்றது என்பதற்கு மிகப்பெரும் சான்றாக இருப்பது அவளுக்கு மிகக் குறைந்த ஊதியம் வழங்குவதுதான்."உண்மையில் இன்றைக்கு பல்வேறு நிறுவனங்களிலும் தொழில் துறைகளிலும் பெண்களே அதிகம் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கின்றனர் என்று பலரும் பெருமை பேசும்பொழுது எனக்கு பரிதாபமாகவே உள்ளது.ஏனெனில் "பெண்களிடம் இலகுவாக வேலை வாங்கிடலாம் என்பதையும் இன்னும் எது சொன்னாலும் அவர்கள் வாயைப்பொத்திக்கொண்டு கேட்டுக்கொள்வார்கள் என்பதையும் மேலும் குறைவான சம்பளம் கொடுத்தாளும் அதனை அவர்கள் வாங்கித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தையும் இந்த சமூகம் அதற்குள் ஒளித்து வைத்திருக்கின்றது என்ற பெருண்மையை நான் நன்றாக உணர்ந்திருக்கின்றேன்.

அவ்வளவு ஏன் இந்த சமூகம் ஒரு இனத்திற்கு எதிராக செய்யும் அநீதியை பெரும்பாலும் மறைத்து வைத்துக்கொள்ளவே விரும்புகின்றது என்பதால் பெரும்பான்மையான பெண்களுக்கே தங்கள் வேலைகளில் அவர்கள் அநீதி இழைக்கப்படுகின்றார்கள் என்ற தெளிவில்லாமல் இருக்கின்றனர் என்பது அதைக்காட்டிலும் கைசேதம் என்றே கருதுகின்றேன்.

ஆக வேலைகளிலும் பெண்களின் ரத்தங்களை உறிஞ்சிக் குடிப்பதில் இந்த சமூகத்திற்கு பெரும் பங்கு இருக்கின்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது என்றே நம்புகின்றேன்.எனவே அன்பர்களே.!
தயவுகூர்ந்து நீங்களும் தெரிந்தோ தெரியாமலோ உங்கள் வீட்டுப்பெண்ணின் பொருளாதாரத்திற்கு தடையாக இருந்திருந்தால் இன்றோடு அதனை தலை முழுகிவிடுங்கள்.அவளுக்கான சுதந்திர பொருளாதாரக் கதவை திறந்துவிட முன்வாருங்கள்.அவளுடைய சக்தியையும் அறிவாற்றலையும் எத்தனை நாளைக்குத்தான் குறைகூறிக்கொண்டே இருக்கப்போகின்றோம்?அவர்களும் எத்தனை நாட்கள்தான் அடக்கி அடிமைபடுத்த நினைக்கும் நம்முடைய எண்ணங்களோடு போராடுவார்கள்?

எனவே அவர்களை அடிமைபடுத்த நினைப்பதை விடுத்துவிட்டு அவர்களுக்காக உரிமையை கொடுக்க முயலுங்கள்.அவை பிற மனிதர்களால் பறிக்கப்படும் பொழுது அவளுக்கு உறுதுணையாக நின்று போராடுங்கள்.அதனால் நிச்சயம் உங்கள் ஆணவம் அழியலாம் ஆனால் நீங்கள் ஒருபோதும் அழிந்துவிடமாட்டீர்கள்.மாறாக எல்லோரும் இந்த உலகின் சுதந்திரக் காற்றை சுவாசிக்க நீங்களும் ஒரு காரணமாவீர்கள்.

இறுதியாக ஒரு பெண் பொருளாதார ரீதியில் அடக்கப்படும்பொழுது அவள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் இங்கு பதிவு செய்தால் மிக பிரயோஜனமிக்கதாக அமையும் என்று கருதுகின்றேன்.எனவே வாருங்கள் அது குறித்தும் சுறுக்கமாக பார்த்துவிடுவோம்.

இன்றைய பெண்கள் பொருளாதார ரீதியில் என்ன செய்ய வேண்டும்?

அன்பு சகோதரிகளே.!

உங்களுக்கு நலவை நாடுவதாகக் கூறி உங்களை திருமணம் செய்து வைத்து கையை கழுவிவிட நினைக்கும் உங்கள் வீட்டு பெரியவர்களிடம் நீங்கள் உங்கள் வாழ்வாதாரத்தின் அஸ்திவாரமான பொருளாதாரத்தை குறித்து முதலில் கேளுங்கள். அதாவது உங்களின் பொருளாதார அடித்தளத்தை மிக உறுதியாக்கிக் கொள்ள ஒரு சிறந்த தொழிலை நீங்களே தொடர்வதை உறுதி செய்யுங்கள்.அதனால் உங்கள் பொருளாதார தேவையை நீங்களே நிர்ணயித்துக்கொள்ளும் அளவிற்கு உங்களால் ஒய்யாரமாக வளர்ந்து நிற்க முடியும் என்று நான் முற்றிலும் நம்புகின்றேன்.

இவ்வாறு நீங்கள் சுயமாக பொருளாதார சுதந்திரம் பெற்றுவிட்டால் பிறகு உங்களுடைய வாழ்க்கைத் துணையைப்பற்றி நீங்களே முடிவு செய்யும் நல்வாய்ப்பையும் பெற முடியும் என்ற உண்மையையும் உங்கள் மேலான கவனத்திற்கு தர இங்கு நான் கடமைபட்டிருக்கின்றேன்.எல்லாம் வல்ல இறைவன் அனைத்து பெண்களுக்கும் நிம்மதியான வாழ்வையும் செல்வ செழிப்பையும் வழங்கட்டும் என்று என்றென்றும் பிரார்த்திக்கின்றேன்.

(என்னுடைய " பெண் அடிமைத்தனமும் அதில் சமூகத்தின் பெரும் பங்கும் " என்ற புத்தகத்தை முழுவதும் வாசிக்க விரும்புபவர்கள் அமேசானில் பெற்று பயன்பெறும்படி அன்போடு வேண்டிக்கொள்கின்றேன்.)


நன்றி:

Writer: A.Sadam husain hasani
கருத்துரையிடுக

புதியது பழையவை