முழுமை பெற்ற மனிதனாக இரு ! Best book of Sadam husain hasani-3

Written By: A. Sadam husain hasani

 

புத்தக சுறுக்கம்:

ஒரு தனிமனிதன் இந்த கரடுமுரடான உலகில் தன்னை எவ்வாறு முழுமைபடுத்திக்கொள்ள வேண்டும் என்பதை மிக எளிய வடிவில் விரிவாக விளக்கியிருக்கின்றேன்.தன்னை ஒரு ஆளுமை மிக்க மனிதராக இச்சமூகத்தில் செதுக்கிக் கொள்ள விரும்புபவர்களுக்கு இப்புத்தகம் மிகச்சிறந்த கையேடாக இருக்கும் என்றே நான் நம்புகின்றேன்.

பிறரின் அடக்குமுறையால் தன்னை சீர்செய்வதை விரும்பாத நண்பர்களுக்கு நிச்சயம் என்னுடைய இந்த புத்தகம் ஒரு நெருங்கிய நண்பனைப்போல் அற்புதமான வழிகாட்டுதல்களை மிக கணிவோடு போதிக்கக் கூடிய நடையிலேயே தொகுத்திருக்கின்றேன்.என்வே என் அன்பிற்கினிய  பெற்றோர்கள் நிச்சயம் உங்கள் வாலிபமடைந்த குழந்தைகளுக்கு இதனை பரிசலிப்பதை நான் மிகவும் ஊக்குவிக்கின்றேன்.ஏனெனில் உங்கள் குழந்தைகளுக்கு அவர்கள் தனித்து நின்று ஜெயிப்பதற்கு  கற்றுக்கொடுக்கும் உங்களுடைய மிகப்பெரும் பொறுப்பை என்னுடைய இந்த சிறிய புத்தகம் நிறைவேற்றித்தரும் என்பதை நான் வாக்குறுதியளிக்கின்றேன்.

அந்த புத்தகத்தின் முன்னோட்டமாக அதில் உள்ள ஒருசில விஷயங்களை மட்டும் இந்த கட்டுரையில் உங்கள் கவனத்திற்கு தருகின்றேன்.நிச்சயம் இந்த கட்டுரை என்னுடைய அந்த முழு புத்தகத்தையும் வாசிப்பதற்கு மிக உதவியாக இருக்கும் என்றே ஆதரவு வைக்கின்றேன்.

யார் முழுமை பெற்ற மனிதர்?

நான் கீழே குறிப்பிடும் இந்த மூன்று அடிப்படைகளையும் ஒருவன் தன்னகத்தே பெற்று இருந்தால் மட்டுமே அவனை இந்த உலகம் முழுமை பெற்ற மனிதனாக கருதுவதற்கு முன் வருகின்றது என்ற நிதர்சனமான உண்மையையே முதலில் உங்கள் முன் சமர்பிக்க நான் ஆசிக்கின்றேன்.

அவைகள்:

1.Healthy - ஆரோக்கியம்

2.Wealthy- செல்வசெழிப்பு

3.Characters- குணநலன்கள்

இந்த மூன்றில் ஒன்றை ஒரு மனிதன் இழந்திருந்தாலும் அவனை இந்த உலகம் முழுமை பெற்ற மனிதன் என்று கணக்கில் எடுத்துக் கொள்வதற்கு ஒருபோதும் தயாராக இல்லை.ஏனெனில் ஒரு மனிதனின் முழுமை என்பது இந்த மூன்றும் ஒருசேர பெறப்படுவதற்கு மட்டுமே சொல்லப்படும் என்பதில் இவ்வுலகம் மிக உறுதியாகவே இருக்கின்றது.அவ்வாறே நானும் கருதுகின்றேன்.ஏனெனில் நீங்கள் உடல் ஆரோக்கியம் மிகுந்தவராக இருக்கின்றீர்கள் ஆனால் உங்களிடம் செல்வம் இல்லையானால் உங்களை இந்த உலகம் முழுமை பெற்ற மனிதனாக ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றதா என்று ஒரு கணம் உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள்.கட்டாயம் "இல்லை" என்பதையே பதிலாக பெற்றுகொள்வீர்கள்.!

ஆக உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இந்த மூன்றையும் ஒருசேர பெற்றே ஆக வேண்டும் என்பதுதான் இந்த உலகம் தேடும் முழுமை பெற்ற மனிதனுக்கான முழு இலக்கணமாகும்.அக்குழந்தை யாருடைய குழந்தையாக இருந்தாலும் சரியே.! அக்குழந்தை இந்த மூன்று விஷயங்களாலும் தன்னை முழுமைபடுத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துடனே பிறக்கின்றது.இவற்றில் எக்குழந்தையும் விதிவிலக்காக முடியாது என்ற கசப்பான உண்மையை நம் மனம் ஏற்க மறுத்தாலும் காலத்தின் கட்டாயத்தால் நாம் பொருந்திக்கொண்டுதான் ஆக வேண்டும்.

ஒருவேலை இம்மூன்றையும் ஒர்சேர நீங்கள் பெற்றிருந்தால் அதற்காக ஒரு கணம் உங்கள் கண்களை மூடி உங்கள் இறைவனுக்கு நன்றி செலுத்திக்கொள்ளுங்கள்.ஏனெனில் உண்மையில் இந்த உலகில் நீங்கள்தான் பாக்கியம் பெற்றவர்கள்.

ஆக ஒரு மனிதனின் முழுமை என்பது இந்த மூன்றும் ஒர்சேரப் பெறப்பட்டதே என்பதை மீண்டும் ஒருமுறை உங்கள் கவனத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டும்படி கேட்டுக்கொள்கின்றேன்.

(Note: மேற்கூறிய மூன்று தலைப்புகளையும் எனது "முழுமை பெற்ற மனிதனாக இரு" என்ற புத்தகத்தில் மிக விரிவாக விவரித்திருக்கின்றேன்.அவற்றை அமெசானில் பெற்று பயன்பெறும்படி அன்போடு வேண்டிக்கொள்கின்றேன்.)


நன்றி:

Written: A.Sadam husain hasani

கருத்துரையிடுக

புதியது பழையவை