ஒரு புத்தகத்தை எப்படி படிப்பது? Best book of Sadam husain hasani-4

 

Written By.A. Sadam husain hasani

வாசிப்பும் நாமும்:

ஒரு புத்தகத்தை வாசிப்பது என்பது ஒருவர் தன்னை செம்மைபடுத்திக் கொள்வதற்கான மிகச் சிறந்த வழி என்பதில் நம்மில் யாருக்கும் மாற்றுக் கருத்திருக்காது என்றே கருதுகின்றேன். உண்மையில் சொல்லப்போனால் வாசிப்பை தொடர்ந்து கடைபிடித்து வருபவரை வெல்வதென்பது அவ்வளவு சுலபமான விஷயமல்ல என்பது எதார்த்தம்.வெளிப்படையாக கூற வேண்டுமானால் இன்றைய தலைவர்கள் அனைவருமே நேற்றய வாசிப்பாளர்கள்தான்! அவ்வாறே இன்றைய வாசிப்பாளர்களே நாளைய தலைவர்களாக இருக்கப்போகின்றார்கள் என்பதும் நிதர்சனம்.

புத்தகங்களை வாசிப்பதின் மூலம் மட்டுமே இந்த மனித சமூகத்தில் ஒரு சிறந்த மனிதன் உறுவெடுக்க முடியும் என்பதே எனது ஆழமான நம்பிக்கையுமாகும்.ஏனென்றால் முந்தைய வரலாற்றையும் அனுபவங்களையும் வாசிப்பதின் மூலம் மட்டுமே இந்த மனித சமூகத்தை அற்புதமாக வழி நடத்திச்செல்லும் ஒரு அனுபவமிக்க சிறந்த தலைவன் உறுவாக்கப்படுகின்றான் என்றே நம்மால் வரலாற்றில் காண முடிகிறது.இன்னும் சொல்லப்போனால் முந்தைய வரலாற்றின் மூலம் படிப்பினை பெற்றவர்களே இன்றைக்கு சிறந்த தலைவர்களாக நமக்கிடையில் வலம் வந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதையும் நம்மால் கண்கூடாக பார்க்க முடிகிறது. எனவேதான் முந்தைய வரலாறுகளையும், அனுபவங்களையும் சுமந்து வந்து பிந்தைய சமூகத்திற்கு அழகுற படிப்பினையை வழங்கும் புத்தகங்களே இந்த மனித சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் அற்புத கருவியாக இருக்கின்றது என்பதையும் மிக ஆழமாக புரிந்துகொள்ள  நம்மில் ஒவ்வொருவரும் கடமையும்பட்டிருக்கின்றோம்.

இவற்றிற்கு மாறாக யார் தன் இயலாமையை மறைக்க "புத்தகங்கள் படித்தால் தான் அறிவாளி என்பதெல்லாம் கிடையாது" என்று விதண்டாவாதம் பேசிக்கொண்டு புத்தக வாசிப்பையும் புத்தகங்கள் வாசிப்பவர்களையும் உதாசினப்படுத்துகின்றார்களோ அவர்கள் பெரும்பாலும் இந்த சமூகத்தில் தறிகெட்ட தறுதலைகளாகவே உலாவருகின்றார்கள் என்பதையும் உங்கள் மேலான கவனத்திற்கு இங்கு தருகின்றேன்.

ஆக புத்தக வாசிப்பு என்பது உண்மையிலேயே அது ஒரு தனி உலகம்.அது அறிவையும், சிந்தனையையும், முந்தைய அனுபவங்ளையும் மட்டுமே பூத்துக்குழுங்கச் செய்யும் ஒரு அற்புத பூஞ்சோழையாகும்.அதற்குள் நுழைந்துவிட்டால் வண்ண வண்ண பூக்களும், அருசுவை கனிகளும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி திக்குமுக்காட செய்துவிடும் என்பதுதான் உண்மை.எனவேதான் அதற்குள் நுழைந்துவிட்டவர்களால் மிக எளிதில் அதனைவிட்டும் வெளியேறிவிட முடியாமல் போய்விடுகின்றார்கள் என்பதையும் நம்மால் காண முடிகிறது.ஏனென்றால் அறிவு தாகம் என்பது அணைபோட முடியாத பேரழை அல்லவா.!

இங்கு லட்சோப லட்ச வைரமும் வைடூரியங்களும் புத்தக வடிவில் நம் கண்களுக்கு முன்பே கொட்டிக்கிடக்கின்றன.ஆனால் நம்மில் பலரும் வீண் வேடிக்கையெனும் கூலாங்கற்களையே நமக்காக தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதுதான் மிக வேதணையான விஷயம்.எனக்கு தெரிந்து மிக அற்புதமான (டைம் பாஸ்) நேர கழிப்பு என்பது புத்தக வாசித்தலாகவே இருக்கின்றது என்றே நான் கூறுவேன்.ஏனெனில் நம் நேரமும் பயனுள்ளமுறையில் கழிந்துவிடுகின்றது.மேலும் நம் ஆண்மாவிற்கு அறிவூட்டிய கடமையும் நமக்கு நீங்கிவிடுகின்றது.

ஆகவே இவற்றியெல்லாம் கருத்தில் கொண்டு சற்று நிதானமாக யோசித்துப்பாருங்கள் நண்பர்களே.!

புத்தக வாசிப்பு என்பது நமது வாழ்வில் எத்தனையோ முன்னேற்றங்களை நிகழ்த்துவதற்கு மிகப்பெரும் காரணியாக இருக்கின்றது என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்.

இறுதியாக ஒன்றை மட்டும் நினைவூட்ட விரும்புகின்றேன். இயந்திரத்தனமான உங்கள் உடலுக்கான வாழ்வை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு உங்கள் ஆண்மாவிற்கும் வாசிப்பு என்னும் வரப்பிரசாதத்தை வழங்க நீங்கள் மிகவும் கடமைபட்டிருக்கின்றீர்கள் என்பதை மட்டும் எக்காலமும் மறந்துவிடாதீர்கள் என்பதை மட்டும் கேட்டுக்கொண்டு  "ஒரு புத்தகத்தை எப்படி படிப்பது"என்ற என்னுடைய புத்தகத்திற்கான சிறிய அறிமுகத்தையும் இங்கு  உங்களுக்கு தர ஆசிக்கின்றேன்.

புத்தக அறிமுகம்:

மேற்கூறப்பட்ட என்னுடைய "ஒரு புத்தகத்தை எப்படி படிப்பது" என்ற புத்தகம் வாசிப்பின் மீது பேராவல் கொண்ட அனைவருக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைய வேண்டும் என்பதற்காக பல்வேறு பிரயோஜனமிக்க வாசிப்புமுறைகளை தொகுத்து வழங்கி இருக்கின்றேன்.புத்தக வாசிப்பில் நீங்கள் புதியவராக இருந்தால் கட்டாயம் இந்த புத்தகம் பல்வேறு வாசிப்பு முறைகளை உங்களுக்கு அறிமுகப்படுத்த மிக உதவியாக இருக்கும் என்றே நம்புகின்றேன்.ஒருவேலை நீங்கள் முன்பே புத்தக வாசிப்பாளராக இருந்தால் புத்தக வாசிப்பில் இலகுவான சிலமுறைகளையும் மேலும் அவற்றிலிருந்து முழு பயனடையும் முறையையும் நிச்சயம் என்னுடைய இந்த புத்தகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் நம்புகின்றேன்.


 நன்றி: எழுத்தாளர்:

A.Sadam husain hasani

கருத்துரையிடுக

புதியது பழையவை